1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. om movie facing troulbe in revene share

எங்களுக்கு அதிக ஷேர் வேணும்!.. ஓம் படம் ரிலீஸ் ஆகுமா?...

om movie
தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உருவாகியிருக்கும் திரைப்படம் ஓம். தமிழ்நாடு, ஆந்திரா எல்லைகளுக்கு இடையே நடக்கும் செம்மரக்கட்டை கடத்தலை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகியிருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலரும் வீடியோவும் வெளியானது. இந்த படம் வருகிற 20ம் தேதி ரிலீஸ் என படக்குழு அறிவித்துள்ள நிலையில் புதிய சிக்கல் எழுந்துள்ளது...

அதாவது வினியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு இடையே லாபத்தை பிரித்துக் கொள்ளும் சதவீத பங்கு தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தனித் திரையரங்குகளில் ஓம் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

விநியோகஸ்தர் கூறிய சதவீதத்தை மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் ஏற்றுக்கொண்ட நிலையில் தனி தியேட்டர் அதிபர்கள் ஏற்கவில்லை. எனவேதான் இந்த சிக்கல் எழுந்துள்ளது. விரைவில் இதில் பேசி முடிக்கப்படும் என சொல்லப்படுகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
முன்பதிவில் ரூ10 கோடியை தாண்டிய Avengers Doomsday.... செம வசூல்...