புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2019 ஒரு கண்ணோட்டம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 27 டிசம்பர் 2019 (13:58 IST)

2019 ஆம் ஆண்டின் டாப் 10 லிஸ்டில் உள்ள ஸ்மார்ட்போன்கள் எவை? ஓர் பார்வை!!

2019 ஆம் ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த ஆண்டின் டாப் 10 இடம் பிடித்த ஸ்மார்ட்போன்கள் எவை என பார்ப்போம்... 
 
10. விவோ V15 Pro:
விவோ V15 Pro, பாப் அப் கேமரா, இன் டிஸ்ப்ளே ஃபிங்கர் ப்ரிண்ட் ஸ்கானர் டிரிபிள் கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 SoC, 6 ஜிபி ராம் 128 ஜிபி மெமரி, 48 மெபி முதன்மை சென்சார், 8 மெபி வைட் ஆங்கில் கேமரா, 5 மெபி டெப்த் சென்சார்,  32 மெபி செல்ஃபி கேமராவையும் கொண்டிருந்தது. 
9. சாம்சங் கேலக்சி M10: 
சாம்சங்கின் மிகவும் மலிவு விலை ஸ்மார்ட்போனாக இது அறிமுகமனாது. 6.22 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே, 2 ஜிபி ராம் 16 ஜிபி மெமரி மற்றும் 3 ஜிபி ராம் 32 ஜிபி மெமரி,  4300 எம்.ஏ.எச் திறனுடைய பேட்டரி, 1.6 GHz Octa கோர் புராசஸ, Android 8.1 OS, முதன்மை கேமரா 13 + 5 மெபி,  MP செல்ஃபி கேமராவையும் கொண்டிருந்தது. 
8. ரெட்மி நோட் 8 Pro:
ரெட்மி நோட் 8 Pro கேமிங்கிற்காக தயாரிக்கப்பட்டது. அடிப்படை வேரியண்டில் 6 ஜிபி ராம் மற்றும் 64 ஜிபி மெமரி, மிட் வேரியண்டில் 6 ஜிபி ராம் மற்றும் 128 ஜிபி மெமரி மற்றும் டாப் வேரியண்டில் 8 ஜிபி ராம் மற்றும் 128 ஜிபி மெமரி, 4,500mAh பேட்டரி திறன் கொண்டிருந்தது. 
7. ஒன் ப்ளஸ் 6T:
ஒன் ப்ளஸ் 6T ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 SoC, பேஸ் வேரியண்ட்டில் 6 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி மிட் வேரியண்ட்டில் மெமரி உயர்த்தாமல், 8 ஜிபி ராம், டாப் எண்டில் 8 ஜிபி ராம் 256 ஜிபி மெமரி, OxygenOS சாதனம் கொண்டிருந்தது. 
6. ரெட்மி 6 Pro: 
ரெட்மி 6 Pro ஃபுல் ஹெச்டி டிஸ்பிளே, Qualcomm Snapdragon 625 SoC, பேஸ் வேரியண்ட் 3GB RAM மற்றும் 32GB மெமரி,  அதன் டாப் வேரியண்ட் 4GB RAM மற்றும் 64GB மெமரி, மேலும், இது இரட்டை 4G திறனைக் கொண்டிருக்கவில்லை மற்றும் கேமராக்கள் சரியானதாக இல்லை. 
5. சாம்சங் கேலக்சி A50:
சாம்சங் கேலக்சி A50-ல் AMOLED டிஸ்ப்ளே, இன் டிஸ்ப்ளே ஃபிங்கர் ப்ரிண்ட் ஸ்கானர், பின்புறத்தில் மூன்று கேமரா, 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ராம் மெமரி 64 ஜிபி, 25 மெபி முதன்மை சென்சார், 8 மெபி கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் depth சென்சார் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. 
4. ரெட்மி நோட் 5 Pro: 
ரெட்மி நோட் 5 Pro இது பிப்ரவரி 2018-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 2018-ஆம் ஆண்டின் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன். ஆனால் இந்த ஆண்டும் இது டாப் 10 லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. 
3. விவோ Z1 Pro: 
விவோ Z1 Pro குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 SoCகொண்ட முதல் ஸ்மார்ட்போன். 5,000mAh பேட்டரியில் பேக்அப், ஹோல் பஞ்ச் டிஸ்ப்ளே, மற்றும் சிறந்த கேமராக்களுடன்,இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 
2. ரெட்மி நோட் 7: 
ரெட்மி நோட் 7-ல் ஸ்னாப்டிராகன் 660 SoC, 4,000mAh பேட்டரி, 12 எம்பி + 2 எம்பி டூயல் ப்ரைமரி கேமராஸ் , எல்ஈடி ஃபிளாஷ், 13 எம்பி முன்பக்க கேமரா, 6.3 இன்ச் (16 சென்டிமீட்டர்ஸ்) 1080x2340 பிக்சல்ஸ், 409 பிபிஐஐபிஎஸ் எல்சிடி, ஆக்டா கோர் (2.2 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர் + 1.8 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர்) ஸ்னாப்ட்ராகன் 660 கொண்டிருந்தது. 
1. ரெட்மி நோட் 7 Pro: 
ரெட்மி நோட் 7 Pro 2019 ஆம் ஆண்டில் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன். ஆண்ட்ராய்டு பைக்கு மேல் இயங்கும் MIUI 10, ஸ்னாப்டிராகன் 675 SoC, ஆக்டா கோர் (2 கிகா ஹெர்ட்ஸ், டூயல் கோர் + 1.7 கிகா ஹெர்ட்ஸ், ஹெக்ஸா கோர்)ஸ்னாப்ட்ராகன் 675, 48 எம்பி + 5 எம்பி டூயல் ப்ரைமரி கேமராஸ், எல்ஈடி ஃபிளாஷ், 13 எம்பி முன்பக்க கேமரா, 4000 எம்எஎச் விரைவு சார்ஜிங் திறன் கொண்டிருந்தது.