புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2019 ஒரு கண்ணோட்டம்
Written By Arun Prasath
Last Updated : வியாழன், 26 டிசம்பர் 2019 (14:37 IST)

2019 ஆம் ஆண்டின் டாப் 10 கிரிக்கெட் வீரர்கள்…

2019 ஆம் ஆண்டின் சர்வதேச அளவிலான டாப் 10 கிரிக்கெட் வீரர்கள் யார் யார் எந்தெந்த இடங்களை பிடித்துள்ளார்கள் என பார்க்கலாம்.

10.ரஷித் கான்

ஆஃப்கானிஸ்தான் அணியின் ஸ்பின் பவுலரான ரஷித் கான் 2019 ஆம் ஆண்டின் உலக கோப்பையில் சரிவர விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்றாலும் ஐபிஎல்-ல் சன் ரைஸ்ர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக விளையாடிய 15 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் டாப் 10 லிஸ்ட்டில் பத்தாவது இடத்தில் உள்ளார்.

 09.குல்தீப் யாதவ்

  இந்திய அணியின் இடது கை ஸ்பின் பவுலரான குல்தீப் யாதவ், கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸுடனான போட்டியில் தொடர்ந்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவிலேயே அதிவேகமாக இரண்டு ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையாளர் என்ற பெருமையை பெற்றார். இவர் டாப் 10 லிஸ்ட்டில் ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.

08.மர்னஸ் லபஸ்சன்

  ஆஸ்திரேலிய அணியின் வலது கை பேட்ஸ்மேனான மர்னஸ் லபஸ்சன் கடந்த நவம்பர் மாதம் பாகிஸ்தானுடனான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி 185 ரன்களை குவித்தார். பின்பு அதே அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 162 ரன்கள் குவித்தார். மேலும் கடந்த டிசம்பரில் நியூஸிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் 368 பந்துகளில் 143 ரன்களை குவித்து தனது 3 ஆவது சதத்தை பதிவு செய்தார். மர்னஸ் டாப் 10 லிஸ்ட்டில் எட்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

07.பாபர் ஆஸாம்

 பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வலது கை பேட்ஸ்மேனான பாபர் ஆஸாம் பாகிஸ்தான் அணியின் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான கேப்டனாக உள்ளார். கடந்த உலக கோப்பையில் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்கி விளையாடியபோது தனது கேரியரின் 3000 ரன்களை தொட்டார். அதன் பிறகு நடந்த பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் பிரபல கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியண்டாட்-ன் சாதனையை முறியடித்தார். பாபர் ஆஸாம் டாப் 10 லிஸ்ட்டில் ஏழாவது இடத்தில் உள்ளார்.

06.கேன் வில்லியம்சன்

  நியூஸிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்ஸன் ஒரு சிறந்த இடது கை பேட்ஸ்மேன் மற்றும் சிறந்த ஸ்பின் பவுலரும் ஆவார். கடந்த மார்ச் மாதம் பங்களாதேஷுடனான டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி 200 ரன்களை குவித்தார். அதன் மூலம் அவர் டெஸ்ட் மேட்ச்களில் அதிவேகமாக 6000 ரன்களை தொட்ட நியூஸிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார். கேன் வில்லியம்சன் டாப் 10 லிஸ்டில் ஆறாவது இடத்தில் உள்ளார்.

05.ஜஸ்பிரித் பும்ரா

  இந்திய அணியின் வலது கை ஃபாஸ்ட் பவுலரான ஜஸ்பிரித் பும்ரா, கடந்த உலக கோப்பை போட்டியின் போது இலங்கைக்கு எதிரான போட்டியில் தனது ஒரு நாள் போட்டிகள் கேரியரின் 100 ஆவது விக்கெட்டை வீழ்த்தினார். மேலும் வெஸ்ட் இண்டீஸுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் தொடரில் அதிகளவில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியாவின் மூன்றாவது பவுலர் என்ற சாதனையை படைத்தார். பும்ரா டாப் 10 லிஸ்ட்டில் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

04.பாட் கம்மின்ஸ்

  ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும், ஃபாஸ்ட் பவுலரும் ஆகிய பாட் கம்மின்ஸ், கடந்த ஜனவரி மாதம் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அபாராமாக பல விக்கெட்டுகளை வீழ்த்தி தொடரின் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் கடந்த ஜூலை மாதம் ஆசஸ் தொடரில் 5 போட்டிகளில் 29 விக்கெட்டுகளை குவித்து அதிகளவில் விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமையை பெற்றார். ஆடம் பார்டர் பதக்கத்தையும் பெற்றார். டாப் 10 லிஸ்ட்டில் பாட் கம்மின்ஸ் நான்காவது இடத்தில் உள்ளார்.

03.பென் ஸ்ட்ரோக்ஸ்

  இங்கிலாந்து அணியின் துணை கேப்டனும், ஆல் ரவுண்டருமான பென் ஸ்ட்ரோக்ஸ், கடந்த உலக கோப்பை தொடரில் கோப்பையை  இங்கிலாந்து அணி பெற்றதில் பெரிதும் பங்கு வகித்தார். உலக கோப்பை போட்டியில் தென் ஆஃப்ரிக்காவிற்கு எதிரான போட்டியில் 79 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார். மேலும் அந்த போட்டியில் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி அந்த போட்டியின் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நியூஸிலாந்துடனான கடைசி போட்டியில் அபாரமாக இரண்டு சிக்ஸ்ர்களை அடித்தார். பென் ஸ்ட்ரோக்ஸ் டாப் 10 லிஸ்ட்டில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

02.ரோஹித் ஷர்மா

 இந்திய கிரிக்கெட் அணியின் ஒரு நாள் போட்டிகளின் துணை கேப்டனும், வலது கை பேட்ஸ்மேனும் ஆன ரோஹித் ஷர்மா, ஒரு நாள் போட்டிகளில் ஒன்றிற்கு மேற்பட்ட இரட்டை சதங்களை குவித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றவர். கடந்த ஏப்ரல் மாதம் இங்கிலாந்துடனான போட்டியில் 122 ரன்களை குவித்து தனது கேரியரின் 12,000 ஆவது ரன்னை குவித்தார். மேலும் கடந்த வெஸ்ட் இண்டீஸுடனான போட்டியில் அதிகளவில் சிக்ஸ்ர்களை அடித்து தோனியின் சாதனையை முறியடித்தார். ரோஹித் ஷர்மா டாப் 10 லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

01.விராட் கோலி

 இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், வலது கை பேட்ஸ்மேனுமான விராட் கோலி, கடந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் தனது ஒரு நாள் போட்டிகள் கேரியரின் 11,000 ரன்களை குவித்து அதிவேகமாக 11,000 ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸுடனான போட்டியில், சர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 20,000 ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். மேலும் கடந்த அக்டோபர் மாதம் தென் ஆஃப்ரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 254 ரன்கள் குவித்து டெஸ்ட் போட்டிகளில் 7 இரட்டை சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். கடந்த வங்கதேசத்துடனான பகலிரவு டெஸ்ட் போட்டியில் தனது கேரியரின் 70 ஆவது சதத்தை ஸ்கோர் செய்தார். விராட் கோலி டாப் 10 லிஸ்ட்டில் ஒன்றாவது இடத்தில் உள்ளார்.