டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு!

Last Updated: திங்கள், 23 டிசம்பர் 2019 (21:30 IST)
இந்திய அணி அடுத்த ஆண்டு இலங்கையுடன் டி20 கிரிக்கெட் தொடர் போட்டியிலும், ஆஸ்திரேலிய அணியுடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது
இதனை அடுத்து சற்று முன்னர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கை அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டி தொடருக்கான அணியில் இடம்பெற்ற வீரர்கள் பெயர்கள் பின்வருமாறு:

விராத் கோலி, தவான், கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், ஜடேஜா, ஷிவம் டுபே, குல்தீப் யாதவ், மனிஷ் பாண்டே, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாக்கூர், பும்ரா ஆகியோர் உள்ளனர்
அதேபோல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணி வீரர்கள் பின்வருமாறு:

விராட் கோலி, தவான், ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், கேதார் ஜாதவ், ஜடேஜா, ஷமி, பும்ரா, குல்தீப் யாதவ், சாஹல், சயினி மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :