கோடிக்கணக்கில் சொத்து, சர்வதேச பள்ளியில் குழந்தைகள்: ஒரு ரயில் திருடனின் 20 வருட வாழ்க்கை!
உழைத்து முன்னேறிவர்கள், அதிர்ஷ்டத்தில் முன்னேறியவர்கள் கோடீஸ்வரராக இருப்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இருபது வருடங்கள் ரயில்களின் திருடி கோடீஸ்வரனான ஒருவர் தெலுங்கானா மாநிலத்தில் சிக்கியுள்ள சம்பவம் அனைவரையும் அதிர வைத்துள்ளது
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த குஷ்வாகா என்பவர் கடந்த 1999 முதல் தொடர்ச்சியாக ரயிலில் திருடி கொண்டு வந்திருக்கிறார். ஒவ்வொரு முறை இவர் ரயிலில் செல்லும் போதும் பயணிகளை குறிவைத்து சுமார் 20,000 முதல் 40,000 வரை மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்களை திருடியதாகவும், திருடிய பணத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது
குறிப்பாக கிரிக்கெட் சூதாட்டத்தில் முதலீடு செய்து பல லட்சங்கள் சம்பாதித்துள்ளதாகவும், தற்போது இவரிடம் ரூபாய் 2 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் சொத்துக்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதற்கேற்ப 20 வருடங்கள் தொடர்ச்சியாக திருடிய குஷ்வாகா தற்செயலாக நேற்று போலீசாரிடம் சிக்கிக் கொண்டார்
அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. மாத வாடகையாக ரூபாய் 30,000 செலுத்தி வருவதாகவும் தனது 2 குழந்தைகளை சர்வதேச பள்ளி ஒன்றில் ஆண்டு கட்டணமாக ரூபாய் இரண்டு லட்சம் செலுத்தி படிக்க வைத்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து குஷ்வாகாவை கைது செய்த போலீசார் அவரிடம் உள்ள சொத்துக்களையும் பறிமுதல் செய்தனர்