திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 15 மார்ச் 2018 (15:14 IST)

எதிர்ப்பார்ப்புகளை கிளப்பும் ரெட்மி 5: விவரம் உள்ளே...

சீன நிறுவனமான சியோமி இந்திய சந்தையில் விற்பனையில்  ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட சியோமி ரெட்மி 5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. 
 
சியோமி ரெட்மி 5 ஸ்மார்ட்போன் 2 ஜிபி ராம் ரூ.7,999, 3 ஜிபி ராம் ரூ.8,999 மற்றும் 4 ஜிபி ராம் ரூ.10,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிளாக், கோல்டு, ரோஸ் கோல்டு மற்றும் லேக் புளூ ஆகிய நான்கு நிறங்களில் கிடைக்கிறது. 
 
சியோமி ரெட்மி 5 சிறப்பம்சங்கள்:
# 5.7 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# 2 ஜிபி / 3 ஜிபி / 4 ஜிபி ராம், டூயல் சிம் ஸ்லாட்
# 16 ஜிபி / 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
# ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் சார்ந்த MIUI 9
# 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 1.25μm பிக்சல், f/2.2 அப்ரேச்சர்
# 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0 அப்ரேச்சர்
# கைரேகை மற்றும் இன்ஃப்ராரெட் சென்சார், 3300 எம்ஏஹெச் பேட்டரி திறன்.
 
ரெட்மி 5 சியோமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், Mi ஹோம் ஸ்டோர் மற்றும் அமேசான் வலைத்தளத்தி கிடைக்கிறது. ரெட்மி 5 ஸ்மார்ட்போனினை ஆஃப்லைனிலும் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 
 
ரெட்மி 5 வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 உடனடி கேஷ்பேக், 100% கூடுதல் 4ஜி டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.