திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 28 ஜனவரி 2018 (18:56 IST)

ஆஃப்லைனில் விலை குறைந்த ரெட்மி 5A

சியோமி நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ரெட்மி 5A மொபைல் போன் ஆஃப்லைனில் தள்ளுடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 
ரெட்மி 5A ஸ்மார்ட்போன் பிக்பஜார் மூலம் ஆஃப்லைனில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குடியரசு தின சிறப்பு விற்பனையில் ரெட்மி 5A - 2ஜிபி ரேம் மாடல் ரூ.4000க்கு விற்பனை செய்யப்பட்டது.  
 
பிளிப்கார்ட் மற்றும் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான தளங்களில் சியோமி ரெட்மி 5A ரூ.5,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் வாங்கினால் கூடுதலாக 10% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 
 
இந்த சலுகை இன்று நள்ளிரவு 11.59 மணி வரை மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 5A சிறப்பு சலுகைகள் ஸ்டாக் உள்ள வரை மட்டும் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.