1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 20 டிசம்பர் 2017 (14:00 IST)

ரூ.1590-க்கு வோடபோன் வழங்கும் ஸ்மார்ட்போன் + அதிரடி சலுகைகள்....

வோடபோன் மற்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவனங்கள் இணைந்து இதற்கு முன்னர் ரூ.2,200 விலையில் பாரத் கேன்வாஸ் சீரிஸ் 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதனை தொடர்ந்து ஐடெல் A20 ஸ்மார்ட்போன் ரூ.1590 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கும் நிலையில், இதன் உண்மை விலை ரூ.3690 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த 4ஜி ஸ்மார்ட்போனுடன் வாடிக்கையாளர்கள் வோடபோன் நெட்வொர்க் தேர்வு செய்து வோடபோன் நெட்வொர்க்கை மூன்று ஆண்டுகளுக்கு பயன்படுத்த வேண்டும். வாடிக்கையாலர்கள் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூ.150-க்கு 36 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். 
 
ஸ்மார்ட்போன் வாங்கி 18 மாதங்கள் நிறைவடைந்ததும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.900 கேஷ்பேக் வழங்கப்படும். இதே போன்று அடுத்த 18 மாதங்களில் ரூ.1200 கேஷ்பேக் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
வோடபோன் கேஷ்பேக் தொகையை எம்-பேசா வாலெட் கணக்கில் சேர்க்கப்படும். வோடபோன் மற்றும் ஐடெல் A20 ஸ்மார்ட்போனுடன் வழங்கப்படும் சேவை மார்ச் 31, 2018 வரை வழங்கப்படுகிறது.
 
ஐடெல் A20 சிறப்பம்சங்கள்:
 
# 4.0 இன்ச் 800x480 பிக்சல் WVGA டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
# 1 ஜிபி ராம், 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
# டூயல் சிம், 2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 0.3 எம்பி செல்ஃபி கேமரா
# 1700 எம்ஏஎச் பேட்டரி திறன். 
# கோல்டு, டார்க் புளூ மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது.