வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 15 டிசம்பர் 2017 (13:27 IST)

டார்கெட் ஜியோ மட்டுமல்ல ஏர்டெல்லும்தான்... சலிக்காமல் வாரி வழங்கும் வோடபோன்!!

வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்து பல சலுகைகளை அறிவித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
 
ரிலையன்ஸ் ஜியோ இலவசங்களை வழங்கி, பின்னர் கட்டண சேவையை துவங்கியது. அன்று முதல் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. 
 
ஜியோ தனது புதிய சலுகைகளின் அறிவிப்பை குறைத்துக்கொண்டாலும், ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் வாரத்திற்கு ஒரு முறை புதிய திட்டங்களையும், பழைய திட்டங்களில் மாற்றங்களை கொண்டு வந்துக்கொண்டே இருக்கின்றன. 
 
அந்த வகையில் வோடபோன் ஜியோ மற்றும் ஏர்டெல்லுக்கு போட்டியாக புதிய சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது. தனது பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டத்தை வோடபோன் அறிவித்துள்ளது. 
 
ரீசார்ஜ் திட்ட விவரங்கள்: 
 
ரூ.348-க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் தினமும் 2 ஜிபி அளவிலான டேட்டாவை பெறலாம். 3ஜி மற்றும் 4ஜி வாடிக்கையாளர்களுக்கு 28 நாளைக்கு 56 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். 
 
மேலும் தினமும் 250 நிமிடங்கள் என 28 நாட்களுக்கு இலவச லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் காலிங் வசதியும் உள்ளது. ஒரே நாளில் 250 நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு நொடிக்கும் ஒரு பைசா வீதம் பணம் வசூலிக்கப்படும். 
 
இச்சலுகையை வோடபோன் செயலி அல்லது இணையதளம் மூலம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு 5% கேஷ் பேக் வழங்குவதாக  அறிவித்துள்ளது. நாள் ஒன்றிற்கு 1 ஜிபி வழங்கி வரும் ஜியோவுக்கும், சமீபத்தில் 2 ஜிபி வழங்குவதாக அறிவித்த ஏர்டெல்லுக்கும் சேர்த்து போட்டியாக இந்த சலுகையை வோடபோன் வழங்கியுள்ளதாக தெரிகிறது.