வோடபோன் நம்பர் 1: மீளா துயரத்தில் ஜியோ ஓனர் அம்பானி!

Last Modified சனி, 20 ஜூலை 2019 (13:10 IST)
டிராய் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுள்ள தொலைத்தொடர்பு நிறுவனம் எதுவென அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் எந்த நிறுவனம் எவ்வளவு வாடிக்கையாளர்களை வைத்துள்ளது என்ற புள்ளி விவரத்தை வெள்யிட்டுள்ளது. 
 
டிராய் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது, வோடபோன் ஐடியா நிறுவனம் 387.55 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்று முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, ஜியோ நிறுவனம் 322.98 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. 
ஏர்டெல் 320.38 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது. மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனம் 115.90 வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. 
 
அதன்படி முதல் இடத்தில் வோடபோன் ஐடியாவும், இரண்டாம் இடத்தில் ஜியோவும் உள்ளது. ஜியோ நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் தாவினாலும் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையே அதிகமாக உள்ளதாக ஜியோ வருத்தத்தில் உள்ளதாம். 


இதில் மேலும் படிக்கவும் :