1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 29 ஜூன் 2019 (12:02 IST)

வோடபோன் காஸ்ட்லி டேட்டா ப்ளான்!

வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ரீசார்ஜ் திட்டங்களில் 3 மாதங்களுக்கு வழங்கப்படும் திட்டங்கள் குறித்த விவரத்தை தெரிந்துக்கொள்ளுங்கள். 
 
வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது சலுகைகளை வழங்கி வருகிறது. சலுகைகளை தவிர்த்து சிறந்த ரீசார்ஜ் ப்ளான்களையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் 3 மாதங்களுக்கான வோடபோன் ரீசார்ஜ் திட்டங்கள் குறித்த தகவல் இதோ...  
 
வோடபோன் ரூ.509:
இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, லோக்கல், எஸ்டிடி கால்களையும், ரோமிங் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ்கள், இலவச லைப் டிவி, மூவிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. 
 
வோடபோன் ரூ.458:
இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, 84 நாள் வாலிடிட்டி. இலவச ரோமிங், லோக்கல், எஸ்டிடி கால்கள் அளவில்லாமல் வழங்கப்படுகின்றன. திரைப்படங்கள், லைப் டிவி, 100 எஸ்எம்எஸ்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன.