1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Vodafone new recharge offer at Rs.229

அடடே 2 ஜிபி டேட்டா: வோடபோன் சூப்பர் ஆஃபர்!!

வோடபோன்
வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி டேட்டா ஆஃபரை அறிமுகம் செய்துள்ளது. 
 
வோடபோன் நிறுவனம் முன்னதாக ரூ.139 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்தது. ரூ.139 சலுகையில் பயனர்களுக்கு 5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்பட்டது. 
 
அதனை தொடர்ந்து இப்போது ரூ.229-க்கு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இந்த சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ் ஆகியவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
மேலும், வோடபோன் பிளே செயலி மூலம் நேரலை டிவி, திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை பார்க்கும் வசதியும் வழங்கப்படுகிறது.
 
இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் 1.5 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வோடபோன் ஏற்கனவே வழங்கி வந்த ரூ.199 சலுகையில் வழங்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
முதலமைச்சரை பேட்டி எடுக்கும்போது மூக்கை பொத்திய ரிப்போர்ட்டரால் சர்ச்சை