புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 20 மார்ச் 2019 (15:06 IST)

ஏன்டா படுத்துறீங்க..? ஜமாய்க்கும் வோடபோன்; ஜாம் ஆன ஏர்டெல்!!

வோடபோன் நிறுவனம் கடந்த ஆண்டும் நவம்பர் மாதம் வழங்கிய 100% கேஷ்பேக் ஆஃபரை மீண்டும் வழங்குவதாக அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான தகவல் பின்வருமாறு...
 
வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் ஒன்றிணைந்தாலும், இரு நிறுவங்களுமே தனித்தனியாகவே சலுகைகள வழங்குகின்றன. அதிலும் வோடபோன் சமீப காலமாக வழங்கும் சலுகைகள் ஜியோவையும் ஏர்டெல்லையும் நேரடியாக எதிர்கொள்வது போலவே உள்ளது. 
 
அந்த வகையில் தற்போது 100% கேஷ்பேக் சலுகையை மீண்டும் வழங்குவதாக வோடபோன் அறிவித்துள்ளது. இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட அன்லிமிட்டெட் சலுகைகளுக்கு மட்டுமே வழங்கப்படும். 
அதாவது, வோடபோன் ரூ.199, ரூ.399, ரூ.458 மற்றும் ரூ.509 உள்ளிட்ட சலுகைகளுக்கு மட்டுமே 100% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதனை ஆக்டிவேட் செய்ய வாடிக்கையாளர்கள் மைவோடபோன் செயலி மூலம் ரீசார்ஜ் செய்ய வேண்டும். 
 
கேஷ்பேக் தொகையை வோடபோன் ரூ.50 மதிப்புள்ள வவுச்சர்கள் மூலம் வழங்கும். இந்த வவுச்சர்களை அடுத்தடுத்த ரீசார்ஜ்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
வோடபோன் இது போன்ற ஆஃபர்களை வழங்குவது ஜியோவிற்கு பெரிய சவாலாக இருக்காது என்றாலும், ஏர்டெல்லுக்கு இது பெரிய சவாலாகவே பார்க்கப்படுகிறது.