திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 9 மார்ச் 2019 (19:45 IST)

இவ்ளோ தானா? வியக்க வைக்கும் விவோ ஸ்மார்ட்போன் விலை!!!

விவோ ஸ்மார்ட்போன் நிறுவனம் புதிய வை சீரிஸ் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை வியக்கதக்க வகையில் குறைவாக உள்ளது. 
 
ஆம், வை91ஐ எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஃபியூஷன் பிளாக், சன்செட் ரெட் மற்றும் ஓசன் புளு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. 
 
விவோ வை91ஐ சிறப்பம்சங்கள்:
# 6.22 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 பிராசஸர், IMG பவர் வி.ஆர். GE8320 GPU
# ஃபன்டச் ஓ.எஸ். 4.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
# 2 ஜிபி ராம், 16 ஜிபி /32 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், ஃபேஸ் அன்லாக்
# 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
# 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.8
# 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# 16 ஜிபி வெர்ஷன் விலை ரூ.7,990; 32 ஜிபி வெர்ஷன் விலை ரூ.8,490