1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 3 ஜனவரி 2019 (13:34 IST)

8,000 + 5,000 மொத்தம் ரூ.13,000 ஆஃபர்: அசத்தும் விவோ!

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ தனது குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் மாடல் மீது 8,000 + 5,000 என மொத்தம் ரூ.13,000-க்கு ஆஃபர் வழங்கியுள்ளது. இது குறித்த விரிவான தகவல் பின்வருமாறு...
 
விவோ நிறுவனம் கடந்த ஜூலை மாதம் விவோ நெக்ஸ் மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்தியாவின் முதல் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போனாக இது இருந்தது.
 
வெளியான போது இது ரூ.47,990 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. இப்போது ரூ.8,000 விலை குறைக்கப்பட்டு ரூ.39,990 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், அமேசானில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் போது ரூ.5,000 எக்சேஞ்ச் ஆஃபரும் கிடைக்கிறது. 
விவோ நெக்ஸ் சிறப்பம்சங்கள்:
# 6.59 இன்ச் 2316x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED 19:3:9 டிஸ்ப்ளே
# 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், அட்ரினோ 630 GPU
# 8 ஜிபி ராம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
# 12 எம்பி டூயல் PD பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ், சோனி IMX363 சென்சார், f/1.8 
# 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
# 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
# டூயல் சிம் ஸ்லாட், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 4000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்