புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (14:59 IST)

பிராண்டு நியூ ஸ்மார்ட்போன் மிக குறைந்த விலையில்.. ரூ.3,000 ஒன்லி!!

சீன நிறுவனமான சியோமி இந்தியாவில் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனை வரும் 28 ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனோடு மேலும் சில ஸ்மார்ட்போன் மாடல்களையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. 
 
அதன்படி, நோட் 7 ப்ரோ, ரெட்மி கோ மற்றும் Mi ஸ்போர்ட்ஸ் ப்ளூடூத் ஹெட்செட் யூத் எடிஷன் உள்ளிட்ட சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் விலை விவரங்களும் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
ரெட்மி கோ ஸ்மார்ட்போன் விலை முதல் மூன்று மாதங்களுக்கு ரூ.3,000 முதல் துவங்கும் என கூறப்படுகிறது. Mi ஸ்போர்ட்ஸ் ப்ளூடூத் ஹெட்செட் யூத் எடிஷன் விலை ரூ.1,499 என நிர்ணயம் செய்யப்படலாம்.
 
ரெட்மி கோ ஸ்மார்ட்போன்தான் இந்தியாவில் ரெட்மியின் விலை குறைந்த ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த அதிகார்ப்பூரவ தகவல்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.