செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 23 டிசம்பர் 2018 (13:43 IST)

மொய் வைப்பது போல் 101 ரூபாய் வச்சு விவோ ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா..?

வெறும் 101 ரூபாய் வைத்து விவோ ஸ்மார்ட்போனை வாங்களாம். அபப்டி ஒரு சிரப்பு ஆஃபரை வழங்கியுள்ளது விவோ ஸ்மார்ட்போன் நிறுவனம். இந்த சலுகை குறித்த விரிவான தகவல் பின்வருமாறு.
 
பண்டிகைகள் வந்தாலே மொபைல் நிறுவனங்கள் சலுகைகளை வாரி வழங்கும். அந்த வகையில் தற்போது கிரிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வரவுள்ள நிலையில் விவோ நிறுவனம் சலுகை விவரங்களை அறிவித்துள்ளது. 
 
அறிவிப்பின்படி வெறும் 101 ரூபாய் மட்டும் செலுத்தி விவோ வ்11 ப்ரோ, விவோ வை95, விவொ நெக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களை வாங்கலாம். ஆனால், அந்த மொபைலுக்குரிய மொத்த தொகையை 6 மாத காலத்திற்குள் இ.எம்.ஐ முறையில் செலுத்திவிட வேண்டும். 
 
இதோடு, ஹெச்டிஎஃப்சி வங்கியின் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி பணம் செலுத்துவோருக்கு 5% வரை கேஷ் பேக் வழங்கபப்டுகிறது. 
 
குறிப்பு: இந்த ஆஃபருடன் மொபைல் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் உரிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.