திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 6 மார்ச் 2019 (14:01 IST)

கெட் ரெடி ஃபோக்ஸ்!! விவோ ஸ்மார்போனின் பிரம்மாண்ட மிட்நைட் சேல்

கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட விவோ ஸ்மார்ட்போனின் விவோ வி15 ப்ரோ மாடல் ஸ்மார்ட்போன் வெளியானது. இந்த ஸ்மார்ட்போன் வெளியானதும், மார்ச் 5 வரை 1 லட்சம் வாடிக்கையாளர்கள் இந்த மாடலை பெருவதற்கு முன்பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. 
 
இந்நிலையில், விவோ வி15 ப்ரோ சேல் இன்று நள்ளிரவு முதல் விவோ இ ஸ்டோர், அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது. விற்பனை என்றால் வெறும் விற்பனை அல்ல சலுகைகளுடன் விற்பனைக்கு வரவுள்ளது. 

விவோ வி15 ப்ரோ சலுகைகள்: 
# எச்டிஎப்சி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 5% கேஸ்பேக் ஆஃபர் 
# 12 மாதத்திற்கு நோ காஸ்டு இஎம்ஐ மற்றும் பஜாஜ் பைனாஸ் வழங்கப்படுகிறது
விவோ வி15 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.39 இஞ்ச் முழு எச்டி திரை (2340 × 1080 பிக்செல்) சூப்பர் அமோல்டு டிஸ்பிளே, 19:5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ 
# குவால்காம் ஆக்டோகோர் ஸ்நாப்டிராகன் 675 பிராஸசர், 2ஜிஎச்செட் மற்றும் அடிரினோ 612 ஜிபியு 
# 6 ஜிபி ராம் / 128 ஜிபி மெமரி, 256 ஜிபி வரை மெமரியை அதிகரிக்கலாம்
# ஆண்டிராய்டு 9.0 பை-யுடன் ஃபண்டச் ஓஎஸ் 9 ஆன் டாப்
# பின்புறம் 48 மெகா பிக்சல் + 8 மெகா பிக்சல் + 5 மெகா பிக்சல் கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, 32 மெகா பிக்சல் பாப் அப் கேமரா, எல்இடி பிளாஷ்
# 3700 எம்ஏஎச் பேட்டரியுடன் டூயல்-எஞ்சின் அதிகவேக சார்சிங் 
 
ரூ.28,990-க்கு விவோ வி 15 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படுகிறது. ப்ளு மற்றும் ரெட் என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரவுள்ளது.