1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 21 ஜூன் 2019 (14:02 IST)

14 நொடிகளில் சார்ஜிங்கா... விவோவின் 120 வாட் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜர்!!

விவோ ஸ்மார்ட்போன் நிறுவனம் 120 வாட் சூப்பர் ஃபிளாஷ் குய்க்கஸ்ட் சார்ஜரை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. 
 
அடுத்த வாரம் அதாவது ஜூன் 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை ஷாங்காய் நகரில் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் என்ற பெயரில் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் விவோ தனது புதிய 5ஜி ஸ்மார்ட்போன் மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜரை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
விவோ 120 வாட் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ்ர் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி திறன் கொண்டது. அதாவது 50% வரை சார்ஜ் செய்ய வெறும் ஐந்து நிமிடங்கள் போதும். இதே பேட்டரி 0 முதல் 2.38% சார்ஜ் செய்ய வெறும் 14 நொடிகளே ஆகும். மொத்தமாக வெறும் 13 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் ஆகிவிடும். 
 
இதற்கு முன்னர் ஒப்போவின் சூப்பர் VOOC ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரியை 35 நிமிடங்களில் சார்ஜ் செய்தது. அதேபோல் சியோமி நிறுவனத்தின் டர்போ சார்ஜர் 100 வாட் சார்ஜராக இருந்தது குறிப்பிடத்தக்கது.