1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Vi recharge offers for work from home plans at rs 351 and rs 251

வொர்க் ஃபிரம் ஹோம் பிரிவில் சலுகைகளை அள்ளி வழங்கும் Vi !!

வோடபோன் ஐடியா
Vi நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வொர்க் ஃபிரம் ஹோம் பிரிவில் சில சலுகைகளை வழங்கியுள்ளது. 
 
வோடபோன் ஐடியா கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இருங்கிணைந்த  நிறுவனமாக Vi  என மாறியது. இந்நிலையில் சமீபத்தில் காலர் டியூன்களுக்கு புதிய சலுகை வழங்கியது போல தற்போது வொர்க் ஃபிரம் ஹோம் பிரிவில் சில ரீசார்ஜ் சலுகைகளை வழங்கியுள்ளது. 
 
ஆம், ரூ. 351 விலையில் கிடைக்கும் புதிய பிரீபெயிட் சலுகையில் 100 ஜிபி அதிவேக டேட்டா 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அதேபோல ரூ. 251 சலுகையில் 50 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
 
இந்த இரு சலுகைகளிலும் வாய்ஸ் கால் பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால் ஆட்-ஆன் பேக் வழங்கப்படுகிறது. இந்த சலுகை தற்போது ஆந்திர பிரதேசம், டெல்லி, குஜராத், கேரளா மற்றும் மத்திய பிரதேசம் போன்ற வட்டாரங்களில் வழங்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
விவசாய மசோதாவை ஆதரித்தது பச்சை துரோகம்! – அதிமுகவுக்கு வலுக்கும் கண்டனம்!