திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (10:20 IST)

திருமணமே செய்துகொள்ள போவதில்லை… சாய்பல்லவியின் முடிவுக்கு காரணம் என்ன?

நடிகை சாய்பல்லவி தான் கடைசி வரைக்கும் திருமணமே செய்துகொள்ளப் போவதில்லை என ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

பிரேமம் படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள ரசிகர்களைக் கவர்ந்த சாய்பல்லவி ஒரே படத்தில் உலக பேமஸ் ஆனார். அதன் பிறகு தமிழில் மாரி 2 உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் இன்னமும் பிரேமம் மலர் டீச்சராகவே அவரை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். இப்போது  தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் ஒரு மருத்துவரும் கூட. இந்நிலையில் அவர் முதன் முதலாக தனது திருமணம் பற்றி பேசியுள்ளார்.

சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் தான் கடைசி வரை திருமணமே செய்து கொள்ளப்போவதில்லை என்றும் அப்படி செய்துகொண்டால் பெற்றோரை பிரிந்து விடக் கூடும் என்பதால்தான் அந்த முடிவை எடுத்துள்ளதாகவும் சொல்லியுள்ளார்.