ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 21 ஆகஸ்ட் 2019 (19:00 IST)

வோடபோனை வீழ்த்த முடியாமல் திணறும் ஜியோ!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வோடபோன் நிறுவனத்தை வீழ்த்த முடியாமல் இரண்டாம் இடத்திலேயே திணறி வருகிறது. 
 
ஆம், மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் டவுன்லோடு வேகம், அப்லோட் வேகம், இணைய வேகம் ஆகியவற்றில் எந்நெந்த நிறுவனங்கள் எந்தெந்த இடத்தில் உள்ளது என தகவ்ல் வெளியாகியுள்ளது. 
 
டவுன்லோடு வேகம்: 
ஜியோ நிறுவனம் நாட்டின் அதிவேக 4ஜி டவுன்லோடு வேகம் வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. ஜியோவின் டவுன்லோடு வேகம் நொடிக்கு 21Mbps ஆக இருந்தது. 
இதனையடுத்து பிஎஸ்என்எல் சராசரி டவுன்லோடு வேகம் 2.5 Mbps ஆக இருந்தது. இதைத் தொடர்ந்து ஐடியா 2 Mbps, வோடபோன் 1.9 Mbps மற்றும் ஏர்டெல் 3ஜி 1.4 Mbps வேகம் வழங்கியிருக்கின்றன. 
 
அப்லோடு வேகம்:
வோடபோன் நிறுவனம் 5.8 Mbps அப்லோடு வேகம் வழங்கியிருக்கிறது. ஐடியா செல்லுலார் 5.3 Mbps அப்லோடு வேகமும், ஜியோ 4.3 Mbps, ஏர்டெல் நிறுவனம் 3.2 Mbps அப்லோடு வேகம் வழங்கியிருக்கின்றன.