தொடர்புடைய செய்திகள்
- வாரத்தின் முதல் நாளே எகிறிய பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
- நேற்று ஏற்றம், இன்று இறக்கம்.. பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்தால் முதலீட்டாளர்கள் குழப்பம்..!
- மீண்டும் 300 புள்ளிகள் அதிகரித்த சென்செக்ஸ்.. இன்றைய பங்குச்சந்தை நிலவரம்..!
- ராமர் கோவில் திறப்பு விழாவால் நேற்று பங்குச்சந்தை விடுமுறை.. இன்றைய நிலை என்ன?
- ராமர் கோவில் திறப்பு விழா: பங்குச்சந்தை வர்த்தக நேரம் மாற்றம்.. இன்றும் செயல்படும் என அறிவிப்பு
நேற்றைய பயங்கர ஏற்றத்திற்கு பின் சற்றே சரிந்தது பங்குச்சந்தை: இன்றைய சென்செக்ஸ் நிலவரம்..!
நேற்று பங்குச்சந்தை பயங்கரமாக உயர்ந்தது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியின் உச்சத்தையே அடைந்தது என்று கூறலாம். நேற்று சென்செக்ஸ் 1200 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்ததால் லட்சக்கணக்கில் பலர் லாபம் பெற்றனர்.
இந்த நிலையில் இன்று சற்றே பங்கு சந்தை சரிந்துள்ளது. பங்குச்சந்தை சற்றுமுன் வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 116 புள்ளிகள் சரிந்து 71 ஆயிரத்து 835 என வர்த்தகம் ஆகி வருகிறது
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி ஏற்ற இறக்கம் இன்றி நேற்றைய நிலையில் அதாவது 21 ஆயிரத்து 738 என்ற நிலையில் வர்த்தகம் ஆகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் நிஃப்டி 50, நிப்டி ஐடி, ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி வாங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva
