1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. today gold and silver rate at chennai

ஒரு கிராம் ரூ.6000ஐ தாண்டிய தங்கம் விலை.. ரூ.10,000 வரை வருமா?

gold
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வரும் நிலையில் கடந்த ஒரே வாரத்தில் 2000 ரூபாய்க்கு மேல் ஒரு சவரன் தங்கம் விலை ஏறி உள்ளது என்பதை பார்த்தோம்
 
அதுமட்டுமின்றி ஒரு கிராம் 6150 என 6000க்கு மேல் தாண்டியுள்ள நிலையில் இன்னும் ஒரு சில வருடங்களில் ஒரு கிராம் பத்தாயிரம் என்ற விலைக்கு வரும் என்று தங்க நகை வியாபாரிகள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் விலையில் எந்த விதமான மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.


சென்னையில் தங்கம் விலை இன்று விலை மாற்றமின்றி ஒரு ஒரு கிராம் ரூபாய் 6150 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 49,200 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,620 எனவும் ஒரு சவரன் ரூபாய் 52,960 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூபாய் 79.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 79000.00 எனவும் விற்பனையாகி வருகிறது


Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
3 நாட்களுக்கு பின் ஓப்பன் ஆன பங்குச்சந்தை.. 200 புள்ளிகள் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!