எஸ்.பி.ஐ வங்கியின் இருப்பு தொகை ரூ.5000; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் எஸ்.பி.ஐ வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திபவர்களின் இருப்பு தொகை ரூ.5000 வரை உயர்த்தப்படுகிறது.
ஸ்டேட் பேங் ஆப் இந்தியா நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு ஊழியர்களையும் வாடிக்கையாளர்களாக கொண்ட ஒரே வங்கி. தற்போது எஸ்.பி.ஐ வங்கி தனியார் துறை வங்கி போல் தனது வாடிக்கையாளர்களின் இருப்பு தொகையை அதிகரித்துள்ளது.
கிராமப்புற வங்கி வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் இருப்பு தொகையாக ரூ.1000 வைத்திருக்க வேண்டும். அதற்கு குறைவாக இருந்தால் உரிய அபராதம் செலுத்த வேண்டும். இதேபோன்று பெருநகர பகுதி வங்கி வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் இருப்பு தொகையாக ரூ.5000 வைத்திருக்க வேண்டும். நகர் பகுதி வங்கி வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் இருப்பு தொகையாக ரூ.5000 வைத்திருக்க வேண்டும்.
தனியார் துறை வங்கிகளில் மட்டும்தான் குறைந்தப்பட்ச இருப்பு தொகை ரூ.5000 ஆக இருக்கும். ஆனால் பொதுத்துறை வங்கிகளில் பெரும்பாலும் அதிகப்பட்சமாக இருப்பு தொகை ரூ.500 தான் இருந்து வருகிறது. தற்போது எஸ்.பி.ஐ. வங்கிகளின் இந்த செயலால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.