செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 12 பிப்ரவரி 2020 (13:22 IST)

நாலா மடிச்சி பாக்கெட்ல போட்டுகலாம்... சாம்சங்கின் புதிய படைப்பு!!

சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்சி Z Flip என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 
 
ஆம், சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி Z Flip ஸ்மார்ட்போனை சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற ஒரு வெளியீட்டு விழாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஃப்ளெக்ஸ் மோட் உள்ளது இதன் முக்கிய சிறப்பம்சமாகும். 
 
இந்திய மதிப்பின்படி ரூ.98,400 என இதன் விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், வருகிற பிப்ரவரி 14 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில்  (தென் கொரியா மற்றும் அமெரிக்கா) குறைந்த அளவுகளில் விற்பனைக்கு வரும்.
 
மிரர் பிளாக் மற்றும் மிரர் பர்பில் ஆகிய நிரங்களில் கிடைக்கும். இது தவிர கேலக்சி வரிசையில் மேலும் 3 புதிய மாடல்களை சாம்சங் நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.