1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 16 ஜூன் 2018 (10:37 IST)

சாம்சங் ஸ்மார்ட்போன் மீது ரூ.9000 கேஷ்பேக்: விபரம் உள்ளே..

இந்தியாவில் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடலின் சன்ரைஸ் கோல்டு எடிஷன் வெளியிடப்பட்டுள்ளது. 
 
இந்த ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக கோரல் புளு, லிலாக் பர்ப்பிள் மற்றும் மிட்நைட் பிளாக் என மூன்று நிறங்களில் வெளியிடப்பட்ட நிலையில் புதிய நிறத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
 
புதிய சன்ரைஸ் கோல்டு நிற கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் 128 ஜிபி வேரியன்ட்-ல் கிடைக்கிறது. இதன் விலை ரூ.68,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 
சாம்சங் நிறுவனத்தின் மொபைலில் இருந்து டிவியை இயக்கும் வசதியை ஸ்மார்ட்திங்ஸ் செயலியும் சேர்த்துள்ளது. இந்த விட்ஜெட் பயனர்களை இருவித-ஸ்கிரீன் மற்றும் சவுன்ட் மிரரிங் செய்யும். 
 
ப்ளிப்கார்ட் தளத்தில் முன்பதிவு செய்யப்படும் புதிய ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் ஜூன் 20 ஆம் தேதி முதல் கிடைக்கும் என தெரிகிறது. 
 
தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டு அல்லது பேடிஎம் மால் மூலம் பணம் செலுத்துவோருக்கு ரூ.9000 கேஷ்பேக் வழங்கப்படும்.