1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 25 ஜூலை 2019 (19:09 IST)

வருகிறது சாம்சங் ஃபோல்ட் – விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க

இரண்டாக மடிக்கக்கூடிய வகையில் டச் ஸ்க்ரீன் மொபைல் ஒன்றை இந்தியாவில் வெளியிட இருக்கிறது சாம்சங் நிறுவனம்.

டச் ஸ்க்ரீன் மொபைல்களின் விற்பனையை இந்தியாவில் முதன்முதலாக துவங்கி வைத்தது சாம்சங். இன்றைக்கு வரையிலும் சாம்சங் மொபைல்களுக்கென பிரத்யேக வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். ஆனால் மற்ற ஸ்மார்ட் போன்களை ஒப்பிடும்போது சாம்சங் போன்களின் விலை அதிகமாக இருக்கிறது. தற்போது இரண்டாக மடிக்க கூடிய வகையில் சாம்சங் ஃபோல்ட் என்னும் புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது சாம்சங் நிறுவனம்.

சிறப்பம்சங்கள்:
 
7.3 இன்ச் நீளமான டச் ஸ்க்ரீன்
 
க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 855 ஆக்டா கோர் பிராசஸரை கொண்டுள்ளது.
 
12 ஜி.பி மேம்படுத்தப்பட்ட ரேம் வசதி உள்ளது. செயல்பாடு வேகமாக இருக்கும்.
 
512 ஜி.பி போன் மெமரி உள்ளது. நிறைய தரவுகளை சேமிக்கலாம்.
 
பின்பக்கத்தில் இரண்டு 12 எம்.பி கேமராக்களும், ஒரு 16 எம்.பி கேமராவுமாக மூன்று கேமராக்கள் உள்ளன. தெளிவான வண்ணமயமான புகைப்படங்களை எடுக்கலாம்.
 
முன்பக்கத்தில் செல்பி எடுப்பதற்காக 10 எம்.பி மற்றும் 8 எம்.பி அளவில் இரண்டு கேமராக்கள் உள்ளன. இதனால் குறிப்பிட்ட பகுதியை மட்டும் எளிதாக போக்கஸ் செய்ய முடியும்.
 
4380 எம்.ஏ.ஹெச் பேட்டரி உள்ளது. வயர்லெஸ் சார்ஜ் செய்யும் வசதி கொண்டது.
 
கைரேகை தொடு திரை போனின் பக்கவாட்டில் உள்ளது. இதனால் போனை கையில் எடுத்தாலே கைரேகை பதிவாகி ஓபன் ஆகும்.
 
4K தரத்தில் வீடியோ காட்சிகளை எடுக்க முடியும்.

குறைகள்:
 
7.3 இன்ச் நீள தொடு திரை என்பதால் சட்டை பையில் வைத்து கொள்வது சிரமம்.
 
மெமரி கார்ட் ஸ்லாட் கிடையாது. போன் மெமரி தீர்ந்து போனால் மெமரி கார்டு உபயோகிக்க முடியாது.
 
ஒரே ஒரு சிம்கார்டு மட்டுமே பயன்படுத்த முடியும். அதுவும் 3ஜி மட்டுமே செயல்படும். 4ஜி கிடையாது.
 
ப்ராஸசிங் அளவுக்கு ஏற்றபடி பேட்டரி இல்லை. விரைவில் சார்ஜ் குறைந்து போகும் வாய்ப்புகள் உண்டு.
 
கடைசியாக விலை. அதிகாரப்பூர்வமாக விலை வெளியிடப்படவில்லை. ஆனால் நிபுணர்களின் கருத்துப்படி 1,20,000 முதல் 1,40,000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடல் இந்தியாவில் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனால் செப்டம்பரில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.