அதிகபட்சம் 1Gbps இணைய வேகம்... ஜியோ 5ஜி சோதனை !!

Sugapriya Prakash| Last Modified வியாழன், 22 அக்டோபர் 2020 (10:27 IST)
ரிலையன்ஸ் ஜியோ அதிகபட்ச 1Gbps இணைய வேகம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
 
ஜியோ நிறுவனத்தில் குவால்காம் நிறுவனம் 0.15 சதவீத பங்குகளை சமீபத்தில் வாங்கியது. இதன் மூலம் இந்தியாவில் குறைந்த விலையில் ஜியோ 5ஜி போன்களை வெளியிட இரு நிறுவனங்களும் திட்டமிட்டு இருக்கின்றன. 
 
இதன் முதற்கட்டமாக ரிலையன்ஸ் ஜியோ 5ஜிஎன்ஆர் சொல்யூஷனில் அதிகபட்சம் 1Gbps இணைய வேகம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன்மூலம் 5ஜி தொழில்நுட்பத்தில் பயனர்கள் அதிவேக டவுன்லோட் மற்றும் அப்லோட் வேகங்களை சீராக அனுபவிக்க முடியும் என தெரிகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :