வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 19 பிப்ரவரி 2020 (12:54 IST)

விலை குறைந்தது ரெட்மி ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா??

சியோமி நிறுவனத்தின் படைப்பான ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மீதான விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 8 ப்ரோ, ஷேடோ பிளாக், காமா கிரீன், ஹாலோ வைட் மற்றும் எலெக்ட்ரிக் புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
 
தற்போது இந்த ஸ்மார்ட்போனின்  6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை மட்டும் தற்சமயம் குறைக்கப்பட்டு இருக்கிறது. ஆம், ரூ. 1000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
 
ரெட்மி நோட் 8 ப்ரோ சிறப்பம்சங்கள்: 
# 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன் மற்றும் ஹெச்.டி.ஆர். 
# மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர் 
# 64 எம்.பி. பிரைமரி கேமரா, 1/1.7 சாம்சங் GW1 சென்சார் மற்றும் ISOCELL பிளஸ் தொழில்நுட்பம் 
# 120 அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார், 2 எம்.பி. கேமரா 
# முன்புறம் 20 எம்.பி. செல்ஃபி கேமரா 
# 3டி வளைந்த கிளாஸ் பேக் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்