வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 23 ஜூலை 2019 (16:30 IST)

ரூ.7,499-க்கு ஹெச்டி டிவி வாங்கனுமா? விவரம் உள்ளே...

ஜெவிசி நிறுவனம் புதிய ஹெச்டி டிவிகளை இந்தியாவில் குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது. 
 
ஆம், 32N380C மற்றும் 24N380C என்ற மாடல் நம்பர்களை கொண்டுள்ள இந்த ஹெச்டி டிவிக்கள் முறையே 32 இன்ச் மற்றும் 24 இன்ச் அளவுகளில் உருவாக்கப்பட்டுள்ளது. 
 
ஜெவிசி 32N380C மாடல் விலை ரூ.9,999 என்றும் ஜெவிசி 24N380C மாடல் விலை ரூ.7,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரு டிவிகளிலும் அளவு மட்டுமே மாறுபடும். 
 
ஹெச்டி டிவியின் சிறப்பம்சம்: 
# மெல்லிய பெசல்கள், ஹெச்.டி. 1366x768 பிக்சல் ரெசல்யூஷன் 
# 24 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி சவுண்ட் 
# கேமிங் மோட், ஹெச்.டி.எம்.ஐ. போர்ட், இரண்டு யு.எஸ்.பி. போர்ட்கள் 
# இன்-பில்ட் ப்ளூடூத் வசதி, சினிமா தர காட்சிகளை பிரதிபலிக்கும் திறன்

ஜெவிசி நிறுவனம் இந்தியாவில் கடந்த மாதம் ஆறு புதிய ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி மாடல்களை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.