செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 27 ஜூன் 2019 (16:19 IST)

24 மணி நேரம்தான் டைம்; கூகுள், அமேசானுக்கு செக் வைத்த ஆர்பிஐ!

கூகுள் பே மற்றும் அமேசான் பே ஆகிய நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது இந்தியன் ரிசர்வ் வங்கி. 
 
கூகுள் பே, அமேசான் பே போன்ற நிறுவனங்கள் வெளிநாடுகளில் உள்ள சர்வர்களில்தான் இந்திய பணப்பரிமாற்ற தரவுகளை சேகரித்து வைக்கின்றன. எனவே, இனி வெளிநாடுகலில் உள்ள சர்வர்களில் பணப்பரிமாற்ற தகவல்களை சேமித்து வைக்க கூடாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 
 
ரிசர்வ் வங்கியின் உத்தரவு பின்வருமாறு, இந்தியாவில் நடைபெறும் பணப்பரிமாற்றம் தொடர்பான தரவுகளை உள்நாட்டு சர்வர்களில்தான் சேமிக்க வேண்டும், சர்வர்கல் இல்லாதா பட்சத்தில் சர்வர்கள் அமைத்து சேமித்து வைக்க வேண்டும் என உத்தவிட்டுள்ளது. 
 
இந்நிலையில், இது குறித்து கூகுள் மற்றும் அமேசான் பே 24 மணி நேரத்திற்கு முடிவெடுத்து பதில் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.