புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 27 ஜூன் 2019 (15:59 IST)

அடர்ந்த காட்டில் வீசப்பட்ட குழந்தை : ஒரு அதிர்ச்சி சம்பவம்!

அமெரிக்க நாட்டில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியில்  ஒரு குழந்தை அழுதுகொண்டிருந்தது. குழந்தையின் அழுகுரலைக் கேட்ட போலீஸார் அங்கு சென்று பார்த்தனர். அங்கு குழந்தை ஒன்று ஒரு பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் கதறிக்கொண்டிருந்தது.
அதைப்பார்த்த போலீஸார் பதறியடித்து அக்குழந்தையை மீட்டு, உடனடியாக முதலுதவி சிகிச்சை செய்தனர். மேலும் அந்தப் பச்சிளம் குழந்தைக்கு இந்தியா என்று பெயரிட்டனர்.
 
இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி குழந்தை மீட்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் யாராவது கர்ப்பிணியைப் பார்த்தீர்களா என்று பொதுமக்களிடம் போலீஸார் விசாரித்தனர்.
 
அந்த மாதிரி யாரையும் தாங்கள் பார்க்கவில்லை என்று  பொதுமக்கள் கூறிய நிலையில்  மருத்துவமனையில் குழந்தையைச் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
 
இதனைத்தொடர்ந்து  கடந்த செவ்வாய்க்கிழமை அக்குழந்தைக்கு இந்தியா என்று பெயரிட்டனர்.