புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (13:00 IST)

ஆன்லைன் பரிவர்த்தனைகளின் டைம் லிமிட் மாற்றம்... விவரம் உள்ளே!!

ஆர்.டி.ஜி.எஸ் மற்றும் என்.இ.எஃப்.டி ஆன்லைன் பரிவர்த்தனைகள் மேற்கொள்வதற்கான நேரம் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 
 
வங்கிக் கணக்கிலிருந்து ரொக்கமாக பரிவரத்தனை செய்யாமல், ஆன்லைனில் பரிவத்தனை செய்யும்போது ஆர்.டி.ஜி.எஸ் மற்றும் என்.இ.எஃப்.டி (RTGS & NEFT) ஆகிய முறைகள் பயன்படுகின்றன. 
 
இதில் ஆர்.டி.ஜி.எஸ் என்பது ரூ.2 லட்சம்-த்திற்கு அதிகமான தொகைகளின் பரிவர்த்தனைக்குரியது. இந்நிலையில் இவற்றின் பரிவர்த்தனை நேரம் மாற்றப்பட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு... 
காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை இருந்த ஆர்.டி.ஜி.எஸ் பரிவர்த்தனைக்கான நேரத்தை மாலை 6 மணி வரை நீடித்தது ஆர்பிஐ. தற்போது இதனை காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றுகிறது. 
 
அதேபோல், ரூ.2 லட்சம் உட்பட்ட என்.இ.எஃப்.டி பரிவர்த்தனைகளை தினசரி 24 மணிநேரமும் செய்வதற்கான அனுமதியையும் அளித்துள்ளது. 
 
ஆர்.டி.ஜி.எஸ் நேர மாற்றம் வரும் ஆகஸ்ட் 26 முதல் அமலுக்கு வருகிறது. என்.இ.எஃப்.டி நேர மாற்றம் வரும் டிசம்பர் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.