விலை குறைந்தது ரியல்மி ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?

Last Updated: திங்கள், 25 மார்ச் 2019 (15:05 IST)
ஒப்போ ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் துணை பிராண்ட் நிறுவனமான ரியல்மி குறைந்த காலக்கட்டத்தில் அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ரியல்மி 2 ப்ரோ மாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 
 
குறிப்பாக ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அதிக விற்பனையை பதிவு செய்திருக்கிறது. இதனால் மேலும் விற்பனையை அதிகரிக்க ரியல்மி 2 ப்ரோ, ரியல்மி யு1 மற்றும் ரியல்மி 3 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதாவது, இன்று (மார்ச் 25) துவங்கி மார்ச் 28 ஆம் தேதி வரை இந்த சிறப்பு தள்ளுபடி ப்ளிப்கார்ட், அமேசான், ரியல்மியின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனையகங்களில் நடைபெறுகிறது. சிறப்பு விற்பனையின் தள்ளுபடி விவரம் பின்வருமாறு... 
1. ரியல்மி 3 பேஸ் வேரியண்ட் விலை ரூ.8,999, தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.500 தள்ளுபடி. ரியல்மி 3 ரேடியண்ட் புளு வெர்ஷனும் விற்பனைக்கு உள்ளது.
2. ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்ட் ரூ.11,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
3. ரியல்மி யு1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.1000 குறைக்கப்பட்டு ரூ.9,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :