வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 26 நவம்பர் 2019 (16:59 IST)

ரூ.7,000 வரை தள்ளுபடி: ஒன்பிளஸ் அதிரடி ஆஃபர்!!

ஒன்பிளஸ் நிறுவனம் ஐந்தாவது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது. 
 
ஆம், புதிய சலுகைகளின் படி ஒன்பிளஸ் 7 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது அதிகபட்சம் ரூ. 5000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 
 
ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ராம் மாடல் விலை ரூ. 5000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 39,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
 
இதன் ஃபிளாக்‌ஷிப் வேரியண்ட் 8 ஜிபி ராம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 3000 விலை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 42,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
 
இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது அதிகபட்சம் ரூ. 2000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 7000 வரை தள்ளுபடி கிடைக்கிறது.