புதன், 17 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 22 பிப்ரவரி 2020 (11:31 IST)

ஐந்து ரூபாய்க்கு நெட்ஃபிலிக்ஸ்: இந்தியர்களுக்கு பிரத்யேக சலுகை!!

ஐந்து ரூபாய்க்கு நெட்ஃபிலிக்ஸ்: இந்தியர்களுக்கு பிரத்யேக சலுகை!!
நெட்ஃபிலிக்ஸ் இந்தியர்களுக்காக மட்டுமே மாதம் 5 ரூபாய்க்கு சேவை கிடைக்கும் வகையில் ஒரு சோதனையில் ஈடுப்பட்டுள்ளது. 
 
ஆம், நெட்ஃபிலிக்ஸ் உடன் இணையும் பயனர்கள் அவர்களின் முதல் மாத சந்தாவை ரூ.5-க்கு பெறலாம். இது ஒரு வியாபாரா யுக்தியாக புது பயனர்களுக்கு வழங்கப்படுகிறது என தெரிகிறது. 
 
நெட்ஃபிலிக்ஸின் இந்த புதிய ரூ.5 சலுகையின் கீழ், பயனர்கள் எந்தவொரு நெட்பிலிக்ஸ் திட்டத்தையும் தேர்வு செய்யலாம்.  முதல் முறையாக நெட்ஃபிலிக்ஸ் சேவையுடன் இணையும் பயனர்களுக்கு அதுவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே இந்த ரூ.5 சலுகை அணுக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.