1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (13:11 IST)

கொரோனா எதிரொலி: விலை உயரும் டிவி!!

கொரோனாவால் இந்தியாவில் டிவி விலை உயருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தல்களை கொடுத்து வருகிறது. சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகானில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், அந்நாட்டை ஆட்டி படைத்து வருகிறது.  
 
சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,236 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74,576லிருந்து 75,465 ஆக அதிகரித்துள்ளது.
 
இந்நிலையில், கொரோனா பாதிப்பால் டிவி பேனல் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. எனவே இதன் காரணமாக டிவி விலை உயருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.  சுமார் 10 சதவீதம் வரை விலை உயரலாம் என்று கூறப்படுகிறது.