திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (16:43 IST)

ரூ. 1,09,999 ஒரே ரேட்: ஷாக் கொடுத்த சாம்சங்!!

சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்சி Z Flip என்ற ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  
 
சமீபத்தில் சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி Z Flip ஸ்மார்ட்போனை சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற ஒரு வெளியீட்டு விழாவில் அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போனில் ஃப்ளெக்ஸ் மோட் உள்ளது இதன் முக்கிய சிறப்பம்சமாகும்.  
 
இந்திய மதிப்பின்படி ரூ.98,400 என இதன் விலை நிர்ணயிக்கப்பட உள்ளது என செய்திகள் வெளியான நிலையில், இதன் விலை ரூ. 1,09,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 
இதற்கான முன்பதிவு பிப்ரவரி 21 ஆம் தேதி துவங்குகிறது. சாம்சங் இ ஸ்டோரில் வாங்குவோருக்கு பத்து நகரங்களில் பிரீமியம் வைட் குளோவ் டெலிவரி செய்யப்படும் என சாம்சங் தெரிவித்துள்ளது.
 
மிரர் பிளாக் மற்றும் மிரர் பர்பில் ஆகிய நிரங்களில் கிடைக்கும். இது தவிர கேலக்ஸி வரிசையில் மேலும் 3 புதிய மாடல்களை சாம்சங் நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.