1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (16:33 IST)

எஸ்.எம்.எஸ் மூலம் ஜியோ போன் முன்பதிவு: வழிமுறைகள் தெரியுமா??

சமீபத்தைய தகவலின் படி ஜியோ போன் வாங்க தங்களது எஸ்.எம்.எஸ். மூலமாகவும் முன்பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


 
 
ரிலையன்ஸ் ஜியோ போனின் விற்பனை செப்டம்பர் மாதம் முதல் துவங்க இருக்கிறது. இதன் முன்பதிவு ஆகஸ்டு 24 ஆம் தேதி முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 
முன்பதிவை ஆன்லைன் மூலகவும் நேரடியாகவும் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும், முன்பதிவிற்கு ஆதார் எண் அவசியன் என்றும் சொல்லப்பட்டது. தற்போது எஸ்.எம்.எஸ் மூலமாகவும் முன்பது செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எஸ்.எம்.எஸ். மூலம் போன் வாங்கும் விருப்பத்தை தெரிவிக்க வாடிக்கையாளர் தங்களது மொபைல் போனில் இருந்து, "JP <> பகுதி தபால் எண் <> ஜியோ ஸ்டோர் கோட்" உள்ளிட்டவற்றை டைப் செய்து 7021170211 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.
 
ஜியோ ஸ்டோர் கோடினை ஆன்லைனிலும் அல்லது அருகில் உள்ள ஜியோ ஸ்டோர்கலுக்கு நேரடியாக சென்றும் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது ஜியோ போன் முன்பதிவு தகவல்கள் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும்.