புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 (11:08 IST)

பன்னீரும், எடப்பாடியும் காணாமல் போய்விடுவார்கள் - சி.ஆர்.சரஸ்வதி பேட்டி

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அரசியலில் இருந்து விரைவில் காணாமல் போய்விடுவார்கள் என தினகரன் ஆதரவு சி.ஆர்.சரஸ்வதி கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
மதுரை மேலூரில் தினகரன் தலமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த விழாவில் சி.ஆர்.சரஸ்வதி பேசியதாவது:
 
சசிகலா தனது குடும்பத்தை மறந்து 33 வருடங்கள் ஜெயலலிதாவிற்காக வாழ்ந்து வந்தார். அவரின் நிழலாகவே அவர் விளங்கினார். ஆனால் அவரை நீக்க வேண்டும் என ஓ.பி.எஸ் சொல்கிறார். கட்சியில் இருந்து நீக்கியதாக எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். இது நியாயம் இல்லை. அவர்கள் இருவரும் அரசியலில் இருந்தே காணாமல் போய்விடுவார்கள். அவர்களை ஒருபோதும் அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
 
சசிகலா நினைத்திருந்தால் அவரின் உறவினர் எவரையாவது முதல்வர் ஆக்கியிருக்க முடியும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அவர் மீதான குற்றச்சாட்டுகள் அபாண்டமானது” எனப் பேசினார்.