வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (11:30 IST)

ஜியோ போன்: முன்பணம் ரூ.1,500 திரும்ப பெற.. அதிரடி விதிமுறைகளை விதிக்கும் அம்பானி!!

ஜியோ போன்: முன்பணம் ரூ.1,500 திரும்ப பெற.. அதிரடி விதிமுறைகளை விதிக்கும் அம்பானி!!
முகேஷ் அம்பானி, இலவச ஜியோ போன் திட்டத்தை அறிவித்தார். ஆனால் அதற்கு முன்பணமாக ரூ.1,500 செலுத்த வேண்டுமெனவும் 3 ஆண்டுகளுக்கு பின்னர் அது திரும்பத்தரப்படும் எனவும் தெரிவித்தார்.


 
 
ஜியோ போன் வாங்க ஆகஸ்டு 24 ஆம் தேதி முதல் முன்பதிவு துவங்கும் என்ற நிலையில், ஜியோ போன் வாங்குவோர் செலுத்தும் முன்பணத்தை பெறுவதற்காக சில விதிமுறைகளை அம்பானி விதிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகின்றன.
 
புதிய விதிமுறைகள் சார்ந்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. வாடிக்கையாளர்கள் முன்பணத்தை பெற கைப்பேசியை மூன்று ஆண்டுகளுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்ற விதிமுறை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.