ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 8 மே 2019 (16:13 IST)

பட்ஜெட் விலையில் அதிரடி சலுகைகளுடன் களமிறங்கும் நோக்கியா!!

நோக்கியா புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை பட்ஜெட் விலையில் சலுகைகளுடன் அறிமுகம் செய்துள்ளது. 
 
ஸ்மார்ட்போன் மீதான மோகம் மக்களுக்கு அதிகமாக உள்ளதால் அதன் உற்பத்தியும் அதிகமகவே உள்ளது. எப்படியும் ஒரு நாளுக்கு ஒரு ஸ்மார்ட்போனாவது வெளியாகிவிடுகிறது. அந்த வகையில் நோக்கியா 4.2 என்னும் ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. 
 
இந்த ஸ்மார்ட்போன் மீது வழங்கப்பட்டுள்ள சலுகைகள் மற்றும் ஸ்மார்ட்போன் குறித்த விவரம் பின்வருமாறு, 
 
சலுகைகள்:
1. ஜூன் 10 ஆம் தேதிக்குள் நோக்கியா வலைதளத்தில் “LAUNCHOFFER” ப்ரோமோ கோட் பயன்படுத்தி வாங்கினால் ரூ.500 உடனடி தள்ளுபடி.
2. சர்விஃபை வழங்கும் ரூ.3500 மதிப்புள்ள ஸ்கிரீன் ரீபிளேஸ்மென்ட் வசதி
3. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 10% கேஷ்பேக் 
4. வோடபோன் மற்றும் ஐடியா சந்தாதாரர்களுக்கு ரூ.2500 உடனடி கேஷ்பேக்.
நோக்கியா 4.2 சிறப்பம்சங்கள்:
# 5.71 இன்ச் 1520x720 பிக்சல் 19:9 a-Si ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர், அட்ரினோ 505 GPU, ஆண்ட்ராய்டு 9.0 பை
# 3 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி, டூயல் சிம் ஸ்லாட்
# 13 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF, f/2.2, 1.12µm பிக்சல்
# 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, 1.12µm பிக்சல்
# 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# நிறங்கள்: பிளாக் மற்றும் பின்க் சேன்ட், விலை: ரூ.10,990