ஜியோ வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு: ரீசார்ஜ் மீது கேஷ்பேக் ஆஃபர்!!


Sugapriya Prakash| Last Modified புதன், 16 ஆகஸ்ட் 2017 (18:35 IST)
ரிலையன்ஸ் ஜியோவின் தண் தணா தண் சலுகை நிறைவு பெறவுள்ளதால், புதிய கட்டண திட்டங்களை முன்பே அறிவித்தது. 

 
 
இந்நிலையில் தற்போது ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் சலுகைகளை அறிவித்துள்ளது. ரூ.300-க்கும் மேல் ரீசார்ஜ் செய்பவற்களுக்கு இந்த கேஷ்பேக் ஆஃபரை வழங்கவுள்ளது.
 
ஆனால் இது பேடிஎம் தளத்தின் மூலம் ரீசார்க் செய்பவர்களுக்கு மட்டும்தான். ரூ.300-க்கு அதிகமாக ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ.76 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 
 
பேடிஎம் தளத்தில் நுழைந்து, ஜியோ நம்பரை பதிவு செய்து ரீசார்ஜ் விலையை பதிவு செய்ததும், Have a promo code? ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 
 
பின்னர் உங்களது மொபைல் நம்பருக்கு வரும் ப்ரோமோ கோடினை பதிவு செய்து பின்னர் ரீசார்ஜை உறுதி செய்யவும். 24 மணி நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கான கேஷ்பேக் பேடிஎம் கணக்கில் சேர்க்கப்படும். 
 
இதே போன்று PhonePe app மூலம் ரிலையன்ஸ் ஜியோ எண் ரீசார்ஜூக்கு கேஷ்பேக் வழங்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :