ரூ.299-க்கு புதிய ரிசார்ஜ் திட்டம்: ஜியோவை திணரவைக்கும் அதிரடி ஆஃபர்!!


Sugapriya Prakash| Last Updated: சனி, 12 ஆகஸ்ட் 2017 (21:04 IST)
ரிலையன்ஸ் ஜியோ அறிவித்த தண் தணா தண் சலுகைக்கு போட்டியாக ஆர்காம் நிறுவனம் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. 

 
 
ஆர்காம் தனது புதிய திட்டத்தின் விலையை ரூ.299 என நிர்ணயம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் அன்லிமிட்டெட் கால்ஸ், எஸ்எம்எஸ்  மற்றும் டேட்டா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 
 
தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோவின் தண் தணா தண் சலுகை ரூ.399-க்கு அன்லிமிட்டெட் டேட்டா, வாய்ஸ் கால்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்டவையை வழங்குகிறது. 
 
ரிலையன்ஸ் ஜியோவிற்கு போட்டியாக ஆர்காம் நிறுவனம் குறைந்த விலையில், அதே சேவையை வழங்க முடிவுசெய்துள்ளது. மேலும், ஜியோவால் ஏர்டெல், வோடோபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் பதிக்கப்பட்டது போல ஆர்காம் நிறுவனமும் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :