வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (21:31 IST)

ஜியோ-வின் தீபாவளி அதிரடி: இஷா அம்பானி சூசக ட்விட்!!

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகளை தொடர்ந்து ஜியோ ஃபைபர் என்ற பிராட்பேண்ட் சேவையை தீபாவளி முதல் துவங்கவுள்ளது.


 
 
கடந்த ஆண்டு முதல் இந்த சோதனையில் ஏடிபட்டு வந்த ஜியோ, ஃபைபர் சேவைகளை இந்த ஆண்டு தீபாவளி முதல் வெளியிடப்படும் என இஷா அம்பானி ட்விட் செய்துள்ளார். 
 
ஜியோ 4ஜி சேவைகளை போன்றே பிராட்பேண்ட் கட்டணங்களும் மலிவு விலையில் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார். 
 
1Gbps வேகத்தில் 100 ஜிபி டேட்டாவின் விலை ரூ.500 என நிர்ணயம் செய்யப்படும் என உறுதி செய்துள்ளார்.
 
முதற்கட்டமாக இந்த சேவை 100 நகரங்களில் துவங்கப்படும் என்று தெரிகிறது. ரூ.500 மட்டுமின்றி அதிக சேவைகளை வழங்கும் டேட்டா திட்டங்களும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.