புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (17:05 IST)

ஜியோ போன் முன்பதிவு: ஆதார் எண், பான் எண், ஜிஎஸ்டி எண் அனைத்தும் கட்டாயம்!!

முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தின் ஜியோ போன் இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. 


 
 
வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி ஜியோ போன் முன்பதிவு துவங்கும்  என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும்,  ரூ.1500 டெபாசிட் செய்ய வேண்டும். இந்த தொகை 3 வருடத்திற்கு பின்னர் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். 
 
ஜியோ போனை ஆப்லைன் மூலம் ஜியோ விற்பனையகங்களில் முன்பதிவு செய்து கொள்ள முடியும். மை ஜியோ ஆப் மற்றும் ஜியோ இணையதளம் மூலமும் இந்த போனை முன்பதிவு செய்ய முடியும். 
 
முன்பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  வணிக உரிமையாளர்கள் பான் எண் அல்லது ஜிஎஸ்டி எண் வழங்கி  எத்தனை தொலைபேசிகள் வேண்டும் என குறிப்பிட்டு முன்பதிவு செய்துகொள்ளலாம்.