ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 9 அக்டோபர் 2017 (20:16 IST)

பேமெண்ட் வங்கி: ஏர்டெல்லுக்கு போட்டியாக எங்கும் எதிலும் ஜியோ!!

வருகின்ற டிசெம்பர் மாதத்தில் ஜியோ பேமெண்ட் பேங்க் அறிமுகம் செய்யப்படும் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.


 
 
ஜியோ பேமெண்ட் வங்கி, 70:30 விகிதாச்சாரத்தின் அடிப்படையில் ரிலையன்ஸ் நிறுவனமும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும் இணைந்து செயல்படவுள்ளது.
 
இந்த வங்கி சேவை இந்த மாதமே நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட நிலையில் தற்போது டிசம்பர் மாதம் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பணப்பரிமாற்றம் செய்வதற்கான தகுதிகளை நிரூபிக்க ரிசர்வ் வங்கி கால அவகாசம கொடுத்துள்ளதால் இதனை அறிமுகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சில மாதங்களுக்கு முன்னர் ஏர்டெல் நிறுவனம் ஏர்டெல் பேமெண்ட் வங்கியை துவங்கியது குறிப்பிடத்தக்கது.