1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 3 அக்டோபர் 2017 (13:28 IST)

ஜியோ அன்லிமிட்டெட்: அம்பானியின் அதிரடி மாற்றங்கள்!!

ஜியோ நிறுவனம் இலவசங்களை வழங்கி வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுத்தது. அதன் பின்னர் குறைந்த கட்டணத்தில் அதிக டேட்டா வழங்கி பயனர்களை தக்கவைத்து கொண்டது.


 
 
ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல், ஐடியா, வோட்போன் மற்றும் பொதுத்துறை நெட்வொர்க்கான பிஎஸ்என்எல் ஆகியவை பல சலுகைகளை அளித்து வரும் நிலையில், அம்பானி ரூ.149 ஜியோ அன்லிமிட்டெட் சலுகையை வெளியிட்டுள்ளார்.
 
அதாவது ரூ.149 ரிசார்ஜ் திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தில் வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படவுள்ளது.
 
மேலும், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்கவுள்ளது.  
 
தினமும் வழங்கப்படும் 2 ஜிபி டேட்டா 4ஜி வேகத்தில் பயன்படுத்த முடியும். 2 ஜிபி டேட்டாவின் பயன்பாடு முடிந்ததும் 4ஜி வேகம் குறைக்கப்படும். 
 
ஆனால் இதிலும் ஒரு சலுகை உள்ளது டேட்டா வேகம் நொடிக்கு 128 கேபி-யாக குறைக்கப்படுவது தற்போது நொடிக்கு 64 கேபி-யாக குறைக்கப்படுமாம்.
 
அதேபோல் ஜியோவின் ரூ.96 திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ், 1 ஜிபி இண்டர்நெட் தினமும் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 7 நாட்கள் ஆகும்.