1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Jio offers offer og GST software

ஜிஎஸ்டிகே ஆஃபர் கொடுக்கும் ஜியோ: தர்மபிரபுவான முகேஷ் அம்பானி!!

ஜிஎஸ்டி
வணிக நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி மூலம் வணிகம் செய்யக் கூடிய மென்பொருள் ஒன்றை ரிலையன்ஸ் ஜியோ ஸ்டார்ட்ர் கிட் மூலம் அறிமுகம் செய்துள்ளது. 


 
 
ஜியோ நிறுவனத்தின் இந்த ஜிஎஸ்டி மென்பொருள் பல சலுகைகளுடன் வெளிவந்துள்ளது. ஜியோ ஜிஎஸ்டி மென்பொருள் மூலம் 1,999 ரூபாய்க்கு மொபைல் போன் உதவியுடன் வியாபாரிகள் பில் செய்ய முடியும். 
 
ஜியோ ஜிஎஸ்டி மென்பொருள், ஒரு வருடத்திற்கு 24 ஜிபி தரவுடன் ஜியோஃபை சாதனம், வரம்பற்ற குரல் அழைப்புகள் கொண்டு உள்ளது என தெரிகிறது.
 
ஜியோ ஜிஎஸ்டி மென்பொருள் ஸ்டார்ட் கிட்டில் ஜிஎஸ்டி தாக்கல் சேவை, ஜியோ பில்லிங் செயலி, ஜியோ ஜிஎஸ்டி அறிவுத் தொடர் ஆகியவை கிடைக்கும். 
 
இதன் மொத்த சந்தை மதிப்பு ரூ.10,888. ஆனால் பேக்கேஜ் ஆஃபராக ஜியோ நிறுவனம் இதனை ரூ.1,999 ரூபாய்க்கு வழங்குகிறது.
 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
நடிகை வழக்கில் திலீப், காவ்யா மாதவன் விரைவில் கைது?